ஷூட் தி குருவி விமர்சனம் :

மதிவாணன் இயக்கத்தில் அர்ஜை, ஷா ரா, ஆஷிக், ராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் ஷூட் த குருவி.டார்க் காமெடி ஜானரில் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. இந்த ஷூட் த குருவி படமும் அந்த ராகம் தான்

தன்னை கேங்ஸ்டர் என நினைப்பவர்களிடம் ‘நான் கேங்ஸ்டர் இல்லை; கில்லர்’ என சொல்லி தன் எதிரிகளை குருவியை சுடுவதுபோல் சுட்டு வீழ்த்துகிற கெத்தான ஆசாமி குருவி ராஜன்,தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கும் சாதாரண மனிதன் ஆஷிக், இந்த இரு கதாபாத்திரங்கள் சந்திக்கும் போகுது நடப்பது என்ன..? சக கேங்ஸ்டர்கள் யாராலும் நெருங்க முடியாத அவனை, உயிருக்குப் போராடும் சாமானியன் ஒருவன் அடித்துவிட அதன் பின் என்ன ஆனது என்ற சம்பவங்கள்தான் கதை.

திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிற அர்ஜைக்கு இந்தப்படம் நல்லபெயரைப் பெற்றுத்தரும் என்பதில் மாற்றமில்லை.அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார்.

ஆஷிக் ஹுசைன் எதார்த்தமாகவும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நல்ல எதிர்காலம் உண்டு தமிழ் சினிமாவில்.

சா ரா மற்றும் ஆஷிக் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. அம்மா செண்டிமெண்ட் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

புத்த பிட்சு போல் வரும் சுரேஷ் சக்ரவர்த்தியுடன் மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

ஷாராவின் நடிப்பும், வசன உச்சரிப்பில் இருக்கிற வழக்கமான எள்ளலும் துள்ளலும் வழக்கம் போல் அசத்தல். அந்த அம்மா சென்டிமென்ட் காட்சியிலும் கவர்கிறார். ‘வீரராகவன் ஹெல்மெட் ஷாப்’, ‘அதஞ்சலி’ என்ற பெயர்களில் வருமானம் பார்க்கும் சீஸனல் பிசினஸ் மேனாக வருகிற அவர், சீஸனல் பிசினஸ் என்றால் என்ன என விவரிக்கிற காட்சி சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விருந்து!

ஒளிப்பதிவு,இசை,இயக்கம் என அனைவரும் தங்கள் பணியை சிரிப்பாக செய்துள்ளனர்,அனைத்திலும் அவர்களின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது

டார்க் காமெடி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல வரப்பிரசாதம்.ShortFlix தளத்தில் இந்த படத்தை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *