படையாண்ட மாவீரா- விமர்சனம்


படையாண்ட மாவீரா படம், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. காடுவெட்டி குரு செய்த நல்லதை மட்டுமே எடுத்துக்காட்டும் படமா வந்துள்ளது ( இன்னொரு பக்கம் காட்டவில்லை)

நடிப்பு:

  • குருவாக நடித்த வ.கெளதமன் சண்டை, நடனம், வசனங்களில் நன்றாக நடித்துள்ளார்.(விஜயகாந்த் சாயல் பல இடங்களில் வெளிப்படுகிறது)
  • பூஜிதா பொன்னாடா சிறிய அளவிலேயே தெரிகிறார்.
  • சமுத்திரக்கனி குறைந்த காட்சிகளில் பலம் சேர்த்துள்ளார்.
  • இளமைக் குருவாக தமிழ் கெளதமன் கவர்ந்துள்ளார்.
  • மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாக செய்துள்ளனர்.

இசை & தொழில்நுட்பம்:

  • ஜி.வி.பிரகாஷ் இசை, வைரமுத்து பாடல்கள் நன்றாகவே உள்ளன.
  • சாம்.சி.எஸ் பின்நிலை இசை சில இடங்களில் மட்டுமே பிடிக்கும்.
  • ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நன்றாக உள்ளது.

இயக்கம்:
வ.கெளதமன் குருவின் வாழ்க்கை சம்பவங்களையும், சில கற்பனையையும் சேர்த்து, அவரை மக்களின் பக்கம் நிற்கும் மனிதராக காட்டியுள்ளார். ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை இல்லாததால் படம் சுமாராகவே தெரிகிறது. ஆனால் காடுவெட்டி குருவை தலைவனாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்

மொத்தம்:
உண்மை + கற்பனை கலந்த வாழ்க்கை கதை. ரசிகர்களுக்கு சாதாரண அனுபவம் தரும் படம்.

ரேட்டிங்: 3.5/5


About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *