Mukundan unni associates விமர்சனம்

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களா வினீத் ஸ்ரீனிவாசன், சூரஜ், தன்வி ராம், சுதி கோப்பா, அர்ஷா பைஜூ, சலீம் குமார் ஆகியோர் நடிச்சிருக்காங்க. ஒரு படத்துக்கு தேவை நல்ல காஸ்டிங், இங்கயே படம் ஜெய்க்குது.


இந்த படம் ஒரு டார்க் காமெடி படம் என்று சொல்லுவாங்க, ஆனால் அதையும் தாண்டி பெரிய விஷயம் ஒன்னு இருக்கு. இந்த படம் ஒரு மெடிக்கல் ட்ராமா, crime பிளாட் தான் ஸ்டோரி. ஆனால் இதை எவ்வளவு நேர்த்தியான காமெடியான முறையில் சொல்ல முடியும் என்று யோசித்து வழங்கியுள்ளார் இயக்குனர். வினீத் இந்த ரோலுக்கு செம்மயா சூட் ஆவுறாரு. அவரின் ஒவ்வொரு முக பாவனைகளும் இந்த படத்துக்கு செம்ம பிளஸ். யாரெல்லாம் ஹீரோவ ஒரு பிளாக் டார்க் evil shadeல பார்க்கணும் அப்டின்னு நினைக்கிறிங்களோ, அவங்களுக்கு எல்லாம் செம்ம ட்ரீட்டா இருக்கும்.

இந்த படத்துக்கு இன்னொரு ப்ளஸ் சப்போர்டிங் கதாபாத்திரங்கள். தன்வி, அர்ஷா ரெண்டு பேருமே பார்ப்பதற்கு செம்ம க்யூட். அதுபோக சலீம், சூரஜ் ஆகியோர் லீட் ரோலுக்கு சூப்பரா சப்போர்ட் பண்ணிருக்காங்க. நடிகர் சூரஜ்ஜ தமிழ் ரசிகர்கள் சமீபத்தில் வெளிவந்த ஜன கன மன படத்தில் பிரித்விராஜுடன் பார்த்தோம். அதுபோலயே இதுவும் அவருக்கு ஸ்கோர் பண்ண வைக்கும் ரோல் தான். படகுக்கு இசை சிபி மாத்தியூ alex, இந்த மாதிரி படத்துக்கு எவ்வளவு வேணுமோ அதை சூப்பரா போட்டிருக்காரு, மனதில் நிற்கும் இசை தான்.

மலையாள சினிமாவில் நல்ல படங்களுக்கு பஞ்சமில்லை என்பதை மீண்டும் இந்த படம் நிரூபித்து இருக்கிறது

About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *