கட்டில்-விமர்சனம்

இயக்குனரும் நடிகருமான ஈவி கணேஷ் பாபு இயக்கத்தில் சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கட்டில்”

பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை இடம்மாற்றுவதிலும் சிக்கல்கள். இவற்றின் விளைவுகள்தான் படம்.

இயக்குனர் என்பதால், தனக்கான காட்சிகளை மிகவும் மெனக்கெடல் செய்து நடித்திருக்கிறார் கணேஷ் பாபு. மூன்று தலைமுறையை காட்டும் காட்சிகளில் இவரே நடித்திருப்பதால், காட்சிகளில் உயிரோட்டம் காணமுடிகிறது.

நாயகி சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வலியால் துடிக்கும் போது பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தைக் கொண்டு வந்து விடுகிறார்.

மூத்தோர்களின் பிரதிநிதியாக இருக்கிறார் கீதாகைலாசம். அவருடைய பாத்திரப்படைப்பு இளையோரைச் சிந்திக்க வைக்கும்.

படத்தில் சிறப்பு

கதைக்கரு
நடிப்பு
ஒளிப்பதிவு
ஸ்ரீகாந்த் தேவா இசை

படத்தில் குறை

சுவாரஸ்யமற்ற திரைக்கதை
சில பாடல்கள்

கட்டில் – சொல்லத் தெரியாமல் சொல்லப்பட்டிருக்கும் உணர்வு…,

About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *