நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். நல்லது, கெட்டது என எதையும் சிந்திக்காமல் மனதுக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட ஆசைப்படுகிற துணிச்சலான டீனேஜ் பருவப் பெண்கள்.அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள்
இந்தப்போக்கு வளர்ந்து, செக்ஸ் மீதான க்யூரியாஸிட்டி அதிகரிப்பதை அடுத்து, எப்படியாவது ஒரு முறையாவது பாய் ஃபிரண்டுடன் உடலுறவை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அந்த விவரம் அந்த பெண்களின் பெற்றோர்களுக்கு தெரியவர அதிர்ச்சி அடைகிறார்கள். தங்கள் பிள்ளைகள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அவர்களைத் தடுத்து அழைத்து வந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில் பிள்ளைகளா… பெற்றோர்களா… யார் விருப்பம் நிறைவேறியது? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்தின் உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்கள்.நாயகிகள் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள்.
பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.
இளம் வயது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அடல்ட் காமெடிக்கு, கொளஞ்சி குமாரின் கேமரா விளையாடுகிறது, பால முரளி பாலுவின் இசையில் பாடல்கள் துள்ளல், விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது
இன்றைய 2k கிட்ஸ் நாடி அறிந்து இந்தப் படத்தை இயக்கியிருப்பதால் அவர்களை வெகுவாக கவரும் வாய்ப்பு இருக்கிறது . அதே சமயத்தில், டீன் ஏஜ் வயதில் தங்கள் குழந்தைகள் எப்படி எல்லாம் கெட்டுப் போக இந்த சமூகத்தில் வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக இந்தப் படத்தை பெற்றோரும் பார்க்கலாம்.
BlackPepperNews News Magazine