சார்லி, காயத்ரி, லிங்கா , விவேக் பிரசன்னா , அபர்னதி, தீனா நடிப்பில் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ஆஹா தமிழ் தளத்தில் டிசம்பர் 30, 2022 அன்று வெளிவரும் படம் தான் உடன்பால்
சார்லிக்கு இரண்டு மகன்கள் லிங்கா, தீனா மற்றும் ஒரு மகள் காயத்ரி மருமகள் அபர்னதி மருமகன் விவேக் பிரசன்னா ஒரு பேத்தி, ஒரு பேரன். அக்கா தனம் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் அவரது மகள்தான் சார்லியின் மருமகள்
தொழிலில் ஏற்பட்ட கடன் வறுமை காரணமாக சொந்த வீட்டை விற்று அந்தப் பணத்தில் தொழில் செய்யப் பயன்படுத்திக் கொண்டு வாடகை வீட்டுக்குப் போய்விடலாம் என்பது மூத்த மகனின் விருப்பம் . அதில் தனக்கும் பணம் கிடைக்கும் என்பதால் வெளியூரில் இருந்து கணவன் மற்றும் பெண் பிள்ளையோடு வந்திருக்கும் மகளும் சம்மதிக்கிறாள் .
ஆனால் ‘வீட்டை விற்று விட்டால் பிறகு சொத்து என்று எதுவும் இருக்காது ; பிள்ளைகளுக்கும் அது பின்னாளில் கஷ்டமாகிவிடும்’ என்று எண்ணும் சார்லி அதை மறுக்கிறார்.
இந்த நிலையில் சார்லி வேலைக்கு சென்ற இடத்தில விபத்து நடக்க அதன் மூலம் பணம் கிடைக்கும் என எண்ணி மொத்த குடும்பமும் நடத்தும் காமெடி கலாட்டா தான் மீதி கதை.
சார்லின் மூத்த மகனாக லிங்கா நடித்திருக்கிறார். வீட்டின் செலவுகளை சுமக்க முடியாத அழுத்தத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநலம் மேலிடும் நடிப்பில் லிங்கா பளிச்சிடுகிறார்.
தங்கையும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஈகோவில் இடித்துக் கொள்ள இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கும் அந்த வேடத்தை அற்புதமாகக் கையாண்டு இருக்கிறார் லிங்கா.
அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்நதியின் நடிப்பு பற்றியும் சொல்லத் தேவையில்லை. ஏற்கனவே தேன் என்ற படத்தில் நடித்து நம் மனங்களில் குடிபுகுந்த அபர்நதிக்கு இதிலும் பேர் சொல்லத் தக்க வேடம். அதை அனாயாசமாக நடித்துக் கடந்திருக்கிறார்.
சார்லின் மகளாக காயத்ரி. இவரது நடிப்பு பற்றியும் சொல்லத் தேவையில்லை. அண்ணனுக்குத் தப்பாத தங்கையாக சுயநலம் மிளிரும் பாத்திரத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கு சரியாக வந்து விட வேண்டும் என்கிற பேராசை மேலிதும் காயத்ரியின் பங்களிப்பு கச்சிதம்.
காயத்ரியின் கணவனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா படத்துக்குப் படம் திறமையில் உயர்ந்து கொண்டே போகிறார். ஒன்றுக்கும் ஆகாத மாப்பிள்ளையாக வரும் அவர் வாயைத் திறந்தாலே நகைச்சுவை பொத்துக் கொண்டு வருகிறது.
லிங்கா, காயத்ரியன் கடைசி தம்பியாக வரும் தீனாவின் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கிறது அதேபோல் லிங்காவின் அத்தையாக வரும் தனமும் ரசிக்க வைக்கிறார்.
உடன்பால் – சிரிக்கவும் சிந்திக்கவும்
BlackPepperNews News Magazine