அவள் பெயர் ரஜினி- விமர்சனம்

காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அவள் பெயர் ரஜினி”.

படம் தொடங்கியவுடன் ஒரு கொலை நடக்கிறது… அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா – இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்த கொலையா என்கிற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறது போலீஸ் ஒருபுறம் கொலை தொடர்பான சாட்சியங்களை விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கப் பார்க்க, இன்னொருபுறம் நாயகன் இந்த கொலையை செய்தவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறான்.

அந்த முயற்சியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழத் துவங்க, நாயகனின் குடும்பம் மீது அடுத்தடுத்து தாக்குதலும் நடக்கத் துவங்குகிறது.

தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டே நாயகன் அந்தக் கொலை குற்றவாளியை கண்டுபிடித்தானா..? எப்படி கண்டுபிடித்தான்…? அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. 

படத்தில் சிறப்பு:

காளிதாஸ் ஜெயராம் நடிப்பு,கதைக்களம் ,பின்னணி இசை நன்றாக இருக்கிறது

இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு

திருநங்கை குறித்து நிறைய விஷயத்தை இயக்குனர் சொல்லி இருக்கிறார்

படத்தில் குறை:

பழிவாங்கல் கதை கிளைமாக்ஸில் சுவாரசியம் இல்லை தேவையில்லாத வசனங்கள்

மொத்தத்தில் அவள் பெயர் ரஜினி -ஒரு தடவை பார்க்கலாம்

About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *