1983’ மற்றும் ’ஆக்ஷன் ஹீரோ பைஜூ’ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அப்ரின் ஷைன் – நிவின் பாலி கூட்டணியின் மூன்றாவது படம் தான் ‘மஹாவீர்யர்’. மலையாள திரைப்படமான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிறுக்கிறது.
மன்னர் ஆட்சி காலத்தையும், தற்போதைய காலக்கட்டத்தையும் இணைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமான சினிமாவாக இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான சிந்தனையோடு உருவாகியிருக்கும் இப்படம் நாட்டில் நடக்கும் பல அவலங்களை தேலூரித்திருக்கிறது.
ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள் இருக்கிறார்களே என ராஜாவிடம் சொல்கிரார், ராஜாவோ அழைத்து வா என்கிறார்…
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிவின் பாலி சாமியாராக ஒரு கோவில் அருகில் உள்ள மரத்தடியில் இருக்கிறார் அவர் அருகில் இருக்கிற அந்த கோவிலில் உள்ள சிலை காணாமல் போகிறது அப்படி காணாமல் போன சிலை இவரது அருகில் இருக்கிறது, அதனால் அவர்தான் அந்த சிலையை திருடினார் என போலீஸ் கைது செய்கின்றனர் அந்த ராஜாவின் விக்கலுக்கும் இந்த சிலை இவர் அருகில் வந்ததுக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான் மீதி கதை இதனை மிக சுவாரசியமாக கூறியுள்ளனர்
ரசிகர்கள் சகலரும் இப்படத்தை புரிந்து கொள்ளவது என்பது சந்தேகம்தான். ஆரம்பத்தில் ராஜா & மந்திரி காலம் மற்றும் தற்காலம் என இரண்டு விதமான காலகட்டங்களில் கதை நகரும்போது ஓரளவு சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதையின் போக்கு இலக்கு மாறி விடுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸுக்கு 20 நிமிடத்திற்கு முன்பான நீதிமன்ற காட்சிகள் வளவளவென்று போய் சற்று எரிச்சலூட்டுவது உண்மைதான்.
நிவின்பாலி சாமியார் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். முதல் பாதியில் நீதிமன்ற வாதங்களில் சபாஷ் பெறுகிறார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் அவர் கையை விட்டு கதாநாயகி, ராஜா, மந்திரி ஆகியோர் வசம் சென்று விடுகிறது. அவர் வெறும் பார்வையாளராக மட்டுமே நிற்கிறார். நடிகர் லால் ராஜாவாக மிரட்டல் நடிப்பை வழங்க, அவரது மந்திரியாக நடிகர் ஆசிப் அலி பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ஷான்வி ஸ்ரீவத்சவா, அனைவரையும் கவரும் அழகியாக இருக்கிறார். நீதிமன்றத்தில் அரைநிர்வாணத்தில் அவர் நிற்கும் போது அவர் மீது அனுதாபம் ஏற்படுகிறது. படம் முழுவதும் நீதிமன்றத்திற்குள் நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. படம் நம்மை சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் சமூகத்தின் அவலங்களை அலசியிருப்பது சிந்திக்க வைக்கிறது.
மொத்தத்தில், அரைத்த மாவையே அரைக்காமல் முழுக்க முழுக்க வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருக்கும் ‘மஹாவீர்யர்’ சிரிக்க வைக்கும் சினிமாவாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும் சமூக படமாகவும் இருக்கிறது.
BlackPepperNews News Magazine