விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70 லட்சம் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சாமானிய அப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகிறார் பிறகு உதவி செய்யும் பேரில் சிலர் இவர்களை மோசடி செய்கிறார்கள் கடைசியில் பிரபு தேவாவின் அப்பா பிரகாஷ் ராஜ் ஒரு யோசனை சொல்றிகிறார் அது என்னவென்றால் ஒரு பெரிய கம்பெனியின் ( வரலட்சுமி ) மகளை கடத்திவிட்டால் உன் மகளை காப்பாற்றி விடலாம் என்கிறார், அதற்காக பிரபு தேவா பல திட்டங்களை போடுகிறார் அவரின் திட்டங்களை அவர் சரியாக செயல்படுத்தி அவரின் குழந்தையை காப்பாற்றினாரா என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் சில டுவிஸ்ட்களுடன் கூறியுள்ளார்
நல்ல கதை மட்டுமன்றி திரைக்கதை அமைப்பும் சூப்பர் தான். முதல் பாதி சற்றே நம் பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதி சூப்பர். பாடல்கள் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. சண்டைக்காட்சிகள் சூப்பர், எமோஷன் சீன்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நாம் எளிதில் யூகிக்க கூடிய ட்விஸ்டுகள் தான் வருகிறது. அடுத்த பாகம் எடுப்பதற்கு ஏற்றது போன்று பல விஷயங்களை வைத்துள்ளார் இயக்குனர்
ஓடிடி தளத்திற்காக எடுக்கும் வெப் தொடருக்கு தேவையான அத்தனை சமாச்சாரமும் இப்படத்தில் உள்ளது. திரைப்படம் என எடுத்ததை விட வெப் சீரிஸாக எடுத்திருக்கலாம் இந்த டீம் என்பதே நம் கருத்து.
BlackPepperNews News Magazine