சீதா ராமம் – விமர்சனம்

பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்யும் ராஷ்மிகா மந்தனாவின் தாத்தா இறப்பதற்கு முன் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராம் என்பவர் 20 வருத்தத்திற்கு முன் எழுதிய கடிதத்தை சீதா மகாலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அரைமனதோடு அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதாவிடம் சேர்ப்பதற்காக ராஷ்மிகா தேடி அலைகிறார் அப்போது தான் ராம் சீதா மகாலட்சுமி யார் என்பதும் அவர்கள் காதல் பற்றியும் ராஷ்மிகாவிற்கு தெரியவருகிறது.

எப்படியாவது இந்த கடிதத்தை சீதாவிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்த ராஷ்மிகா கடைசியில் சீதா மகாலட்சுமியிடம் கொண்டு சேர்க்கிறார் அதன்பின் என்ன நடந்தது என்பது தான் மனதை உறைய வைக்கும் காதல் கதையாக வெளியாகி உள்ளது.

சின்ன சின்ன ட்விஸ்ட் ரசிக்கவைக்கும் திரைக்கதையோடு இளமை துள்ளலுடன் ஆரம்பிக்கும் கதையை எமோஷனலாக முடிக்கிறார் இயக்குனர்.

1964, 1984 என இரண்டு காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. அந்த காலகட்டத்தை அதன் பிரமாண்டத்தை அட்டகாசமாக திரையில் வடித்திருக்கிறார்கள். படத்தின் மேக்கிங் உலகத்தரம். கேமரா எடிட்டிங் இசை , திரைக்கதை என அனைத்தும் ஒரு படத்திற்குள் எப்படி பொருந்திப் போக வேண்டும் என பாடமெடுக்க இது மிகச்சிறந்த படைப்பு.

விஷால் சந்திரசேகர் இசையில் சில பாடல்கள் மட்டும் தரம். பின்னணி இசை உலகத்தரம். பிஎஸ் வினோத் & ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்து பிரமிப்பை கூட்டியுள்ளது. குறிப்பாக ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மிருணாள் தாகூர் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகளும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும், அதேசமயம் மிக அழகாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இப்படm ஏற்படுத்தும் பிரமிப்புக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது இப்படத்தின் கலை இயக்கம். 1960-களில் ஆரம்பித்து 1980 களில் நடக்கும் கதையாக இருப்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் பிரதிபலிக்க சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார் கலை இயக்குநர். அதேபோல, அக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல் அழகான உடைகளை சரியான கலவையில் கொடுத்து படத்தை இன்னமும் மெருகேற்றி உள்ளார் காஸ்ட்யூம் டிசைனர்.

மொத்தத்தில் இந்த சீதா ராமம் காதல் கடலில் மூழ்க நினைப்பவருக்கு நல்ல கடல்

About admin

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *