நானே வருவேன் திரைப்படத்தின் “ரெண்டு ராஜா” பாடல் வெளியீடு.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.படத்திலிருந்து வெளியான “வீரா சுரா” எனும் முதல் பாடல் மற்றும் டீசர்  ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 10.50-க்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. “ரெண்டு ராஜா” என தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், நடிகர் தனுசும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை நடிகர் தனுஷே எழுதியுள்ளார்.மேலும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

About admin

Check Also

நாகபந்தம்” படத்தின் ப்ரீ-லுக்

பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *