சமரா – விமர்சனம்

சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் சினு சித்தார்த் ஒளிப்பதிவில் தீபக் வாரியர் இசையில் நடிகர்கள் ரகுமான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “சமாரா”.

இமாச்சல பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில், ஆலன் மோசஸ் இராணுவ மருத்துவப் படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். ஒரு விபத்தை எதிர்கொள்ள நேரிட வாழ்க்கையில் தாங்கிக்கொள்ள முடியாத திருப்பம் ஏற்படுகிறது.இவருயை வெடிகுண்டு காயங்கள் கடுமையானவையாக மாறி அவருடைய உடல் முழுவதும் தோளில் நீங்காத வடுக்களாக மாறி விகாரமாகிவிடுவதால் அவரது கனவுகளையும் அவரது குடும்பத்தையும் சிதைத்து பிரிந்து விடும் அளவிற்கு நொறுங்கத் தொடங்குகிறது. அவரது மனைவி மகளை அழைத்துக் கொண்டு ஆலனிடமிருந்து பிரிந்து வேறொருவருடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். இந்த முடிவு ஆலனைத் தனிமைப்படுத்துகிறது, அவரது வேலை மற்றும் பிரிந்த குடும்பத்தை நினைத்து தனிமையில் வாடுகிறார். தன் மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மனைவியிடம் கேட்க, அதற்கு சம்மதம் வாங்கும் தருணத்தில் இமாச்சல பிரதேசத்தில் மகள் நடைபயணம் மேற்கொள்ளும் போது எதிர்பாராமல் விபத்தில் சிக்குகிறாள். அங்கே இறந்து கிடக்கும் இரண்டு மனிதர்களின் உடலிலிருந்து மனிதகுலத்திற்கும் அறிவியலுக்கும் அந்நியமான ஒரு வைரஸ் மகள் ஜானிக்கு தொற்றிக் கொள்கிறது.இந்த தொற்று ஒரு சிக்கலான சூழ்நிலையை கொண்டு வருகிறது. இந்த வைரஸ் மற்றும் இறந்த நபர்கள் பற்றிய விசாரணை அதிகாரியான ஆண்டனி ஜே, காட்சிக்குள் நுழைகிறார். அவர் வைரஸைச் சுற்றியுள்ள மர்மத்தையும் அதன் அபாயகரமான விளைவுகளையும் கண்டுபிடிக்கிறார். இது காலத்துக்கு எதிரான பந்தயம், கண்ணுக்கு தெரியாத எதிரியைப் புரிந்துகொண்டு வெற்றிகொள்ளும் போர் என்பதை உணர்ந்து ஆலனையும், ஜானியையும் ஒரு வீட்டில் தனிமை படுத்தச் சொல்கிறார். அவர்கள் இருவரையும் கண்காணித்து அவர்கள் சந்திக்கும் பாதிப்புக்களை கண்டறிந்து அதற்கான மருந்தையும் தீர்வையும் கண்டுபிடிக்க போராடுகிறார். அதற்குள் மனிதகுலம் அனைவருக்கும் பேராபத்தை விளைவிக்கும் வைரஸ் அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த சூழ்நிலையின் தீவிரம் எத்தகைய ஆபத்தை விளைவிக்கிறது? ஆலனும், ஜானியையும் காப்பாற்றினார்களா? ஆண்டனி இறந்த இருவர் யார் என்று துப்பறிந்தாரா? இறுதியில் யார் இத்தகைய ஆபத்தை விளைவித்தனர்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

காவல்துறை அதிகாரியாக கம்பீரத்துடன் ரகுமான் வருகிறார். ஆக்சனிலும் அதிரடி காட்டுகிறார். இவரது இன்னொரு செம பில்டப்.

வித்தியாசமான கேரக்டரில் நடிகர் பரத். திடீரென வருகிறார் திடீரென காணாமல் போகிறார். இவரது டாக்டர் கேரக்டர் முக்கியமானது என்றாலும் இன்னும் காட்சிகள் கொடுத்து கதையை நகர்த்தி இருக்கலாம்.

வித்தியாசமான கோர முகத்தில் பினோஜ். இது போன்ற முகத்துடன் நடிப்பதற்கே தைரியம் வேண்டும். இவரது கேரக்டரும் க்ளைமாக்ஸ் சீனும் திருப்புமுனையும் பாராட்டுக்குரியது.

இவரின் மகளாக நடித்துள்ள சஞ்சனா கொள்ளை அழகில் கவர்கிறார். பனி படர்ந்த காட்டில் பனித்துளியாய் இவரும் கண்களுக்கு விருந்தளிக்கிறார்.

இவர்களுடன் ராகுல் மாதவ், பினோஜ் வில்லியா, கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ் வில்லியா, வீர் ஆர்யன், மீர் சர்வார், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், நீட் சௌத்ரி, ஷபரீஷ் வர்மா மற்றும் விவியா சாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தீபக் வாரியர் இசையமைக்க, கோபி சுந்தரின் பின்னணி இசையமைத்துள்ளார். சினு சித்தார்த்த் ஒளிப்பதிவு செய்ய அயூப் கான் படத்தொகுப்பு செய்துள்ளார்.

எம்.கே.சுபாகரன் மற்றும் அனுஜ் வர்கீஸ் வில்லியதத் தயாரித்துள்ளனர்.

படத்தில் பிளஸ்

➡ரஹ்மான் & பரத் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தின் மைனஸ்

➡மிகவும் இழுவையான திரைக்கதை

About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *