அந்தநாள்- விமர்சனம்

திரைப்பட இயக்குநர் ஆர்யன் ஷாம் அவர் இயக்கவிருக்கும் அமானுஷ்ய திகில் படத்தில் பணிபுரிய உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கிழக்குக் கடற்கரைச்சாலை உள்ள ‘பஞ்சமி பங்களா’ என்கிற பழைமையான தோற்றத்துடன் இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கி கதை விவாதத்தைத் தொடங்குகிறார். அதன்பிறகு என்ன நடிக்கிறது..? படம் எடுத்தார்களா..? கதைவிவாதம் நடந்ததா..? என்பதே மீதி கதை.

ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பலம் வாய்ந்த வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் நாயகன் ஆர்யன் ஷாம், முதல் படத்திலேயே எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்து கவனம் ஈர்க்கிறார். ஆறடி உயரம், அமைதியான முகம் என்று ஒரு பக்கம் காதல் கதைகளுக்கு பொருத்தமானவராக இருப்பவர், மற்றொரு பக்கம் கோபமான முகத்தோடு ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அசத்துகிறார்.

கதையின் நாயகனை தவிர்த்து திரையில் தோன்றும் ஏனைய நடிகர்கள் இயக்குநர் எதிர்பார்த்த வகையில் தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி சில இடங்களில் அனுபவம் மிக்க நடிப்பால் ரசிகர்களை ஓரளவு கவர்கிறார்.

கதை திரைக்கதையை நாயகனோடு சேர்ந்து எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் வி.வி.கதிரேசன்.எடுத்துக் கொண்ட கதையைச் சரியாகச் சொல்லிச் செல்வதில் தடுமாறியிருப்பது பலவீனம்.அதேசமயம், இதுவரை சொல்லப்படாத நரபலியை மையமாகக் கொண்ட கதை.அடுத்து என்ன நடக்கும்? என்கிற உண்மையான அச்சத்துடன் எதிர்பார்க்க வைத்திருப்பது,நாயகன் குறித்த எதிர்பாரா திருப்பம்,நரபலியின் பின்னணி ஆகியன பலம்.

Related posts:

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *