பதான் – விமர்சனம்

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவில் கொரோனாவை விட அதி பயங்கரமான ஒரு வைரஸை செலுத்த நினைக்கிறது, இதனை இந்திய இராணுவத்தின் உளவாளியாக இருக்கும் ஷாருக்கான் எப்படி தடுக்கிறார் என்பதே பதான் படத்தின் ஒன்லைன். 57 வயதில் 25 வயது இளைஞன் போல் உள்ளார் ஷாருக்கான். ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளிலும் தனது உயிரை கொடுத்து நடித்துள்ளார். வழக்கம்போல நடிப்பிலும் காமெடியிலும் அசத்தியுள்ளார், மறுபுறம் தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு இணையாக நடிப்பிலும், சண்டை காட்சிகளிலும் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

8 பேக்ஸ்சுடன் வரும் ஷாருக்கானை பார்க்கும்போது திரையரங்கம் ஆரவாரத்தில் அதிர்கிறது. நிறைய சண்டை காட்சிகளை அசால்ட்டாக செய்து அசத்தியிருக்கிறார். நாட்டிற்காக என்ன தியாகமும் செய்யலாம் என்று அவர் பேசும் வசனங்களில் கண்கலங்க வைக்கிறது அவரது நடிப்பு. வழக்கம்போல, காமெடி ஆக்சன்,சென்டிமென்ட் என எல்லா இடங்களிலும் மிரட்டி அவரது ரசிகர்களுக்கு முழு விருந்து வைத்துள்ளார் ஷாருக்கான்.

ஹீரோ-வில்லன் மோதல் ரசிகர்களை அதிர வைக்கிறது. “தேசப்பற்று” என்னும் கருத்தை திகட்டும் அளவில் கொடுக்காமல் தேவையான அளவில் கொடுத்திருப்பது சிறப்பு. படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலத்தையும் ஈர்ப்பையும் கொடுத்துள்ளது. “சல்மான்” கானின் கேமியோ பெரிய அளவில் படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது,. “சல்மான்-ஷாருக்” ஒன்றாக தோன்றும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கிறது.

மொத்தத்தில் ஹாலிவுட் சண்டை படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் இப்படமும் நிச்சயமாக பிடிக்கும். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் கால காலமாக கண்ட அதே கதை தான்

About Karthik

Check Also

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *